பதவி நீக்கக் குற்றச்சாட்டிலிருந்து செனட் சபையில் ட்ரம்ப் விடுவிக்கப்படுவார்!

பதவி நீக்கக் குற்றச்சாட்டிலிருந்து செனட் சபையில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுவிக்கப்படுவார் என்பது உறுதியாகியுள்ளது.
பதவி நீக்கம் செய்வதற்குத் தேவையான போதிய பலம் செனட் சபையில் குடியரசுக் கட்சியினருக்கு இல்லாததால், அவர் அந்த சபையால் குற்றவாளியாக அறிவிக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
பதவி நீக்க விசாரணைக்குப் பிறகு ஒருவரை குற்றவாளியாக அறிவிப்பதற்கு செனட் சபையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு வேண்டும்.
100 இடங்களைக் கொண்ட செனட் சபையில், குடியரசுக் கட்சியினருக்கும் ஜனநாயகக் கட்சியினருக்கும் தலா 50 இடங்கள் உள்ளன.
எனவே, ட்ரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்கு குறைந்தது 17 குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவாவது ஜனநாயகக் கட்சிக்குத் தேவை.
எனினும், பதவி நீக்க விசாரணையை எதிர்க்கும் ராண்டல் பாலின் தீர்மானத்துக்கு எதிராக 5 குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே வாக்களித்தனர். ஏனைய அனைவரும் ட்ரம்ப்புக்கு ஆதரவான நிலைப்பாட்டையே கடைப்பிடித்தனர். எனவே, பதவி நீக்கக் குற்றச்சாட்டிலிருந்து செனட் சபையில் ட்ரம்ப் விடுவிக்கப்படுவார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.