பத்திரிகைச் சுதந்திரத்தில் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து!
In இங்கிலாந்து April 18, 2019 11:00 am GMT 0 Comments 2153 by : shiyani

பத்திரிகைச் சுதந்திரம் மிக மோசமான நிலையிலுள்ள ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக இங்கிலாந்து விளங்குவதாக எல்லைகள் தாண்டிய செய்தியாளர்கள் (Reporters Without Borders) என்ற அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவின் 2019 ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டுக்கான 180 நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்து 33 வது இடத்தைப் பெற்றுள்ளது.
ஜமெய்க்கா, சூரினாம், கானா, நமீபியா, லத்வியா, மற்றும் லிச்சன்ஸ்டைன் ஆகிய நாடுகள் இங்கிலாந்தை விட முன்னிலை வகிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊடகவியலாளர்கள் மீதான தனது விரோதமான நிலைப்பாட்டின் காரணமாக கடந்த வருடத்தை விட மூன்று இடங்கள் பின்சென்ற அமெரிக்கா 48 வது இடத்தைப் பெற்றுள்ளது.
முன்னெப்போதுமில்லாத அளவில் அமெரிக்க செய்தியாளர்கள் பலர் மரண அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியிருப்பதாகவும் இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பத்திரிகைச் சுதந்திரத்தில் சிறந்துவிளங்கும் நாடாக மூன்றவது தடவையாகவும் நோர்வே முதலிடத்தைப் பெற்றுள்ளது. துர்க்மெனிஸ்தான் கடைசி இடத்தைப் பெற்றுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.