பயங்கரவாதிகளின் தினங்களைக் கொண்டாடுவது சட்டப்படி குற்றம்- அஜித் ரோஹன

பயங்கரவாதிகளின் தினங்களைக் கொண்டாடுவது குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றச் செயற்பாடாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் 1999ஆம் ஆண்டிலேயே இந்த இரு தினங்களையும் மாவீரர் தினமாகப் பெயரிட்டிருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த தினத்தையே இவர்கள் இவ்வாறு கொண்டாட முயற்சித்து வருகின்றனர் என அவர் கூறியுள்ளார்.
முல்லைத்தீவில் மாவீரர் நாள் நினைவுகூரலுக்கான தடையை நீக்கக் கோரி விண்ணப்பம் செய்தமையை சுட்டிக்காட்டியே அஜித் ரோஹன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுக்குப் புறம்பாக எவரேனும் செயற்பட்டால் அவர்களைக் கைதுசெய்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியும் என அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.