பயங்கரவாதிகளை நினைவுகூருவதற்கு அனுமதியளிக்கக்கூடாது – சரத் வீரசேகர
In இலங்கை January 11, 2021 9:38 am GMT 0 Comments 1723 by : Dhackshala

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தனியொரு சமூகத்தின் சொத்து அல்ல என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், அப்பாவிப் பொதுமக்களை நினைவுகூரும் போர்வையில் தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகளை நினைவுகூருவதற்கு அனுமதியளிக்கக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவில் “யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்பது தனியொரு சமூகத்தின் பிரத்தியேக களமோ அல்லது சொத்தோ அல்ல. இது ஒருமித்த இலங்கையின் அனைத்து சட்டங்களுக்கும் உட்பட்டதாகும்” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அப்பாவிப் பொதுமக்களை நினைவுகூருவது என்ற போர்வையில் தடைசெய்யப்பட்ட ஒரு இயக்கத்தை நினைவுகூருவதற்கும் அமைதியின்மையை ஏற்படுத்துவதற்கும் எந்தவொரு தரப்பினருக்கும் அனுமதியளிக்கக் கூடாது என சரத் வீரசேகர வலியுறுத்தியுள்ளார்.
#JaffnaUniversity is not the exclusive domain or property of one community. It belongs to all law abiding #SriLanka(ns) alike
None will & shud be allowed to commemorate dead #Terrorists of a proscribed org undr the guise of remembring innocent civilians & create disharmony!#lka https://t.co/eDPAXAFSOq pic.twitter.com/pikBXqqW6u
— Sarath Weerasekera (@ReAdSarath) January 10, 2021
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.