பயங்கரவாத குண்டு தாக்குதலில் உயிரிழந்த பிரித்தானியா குடும்பத்தின் ஒளிப்படம் வெளியீடு!
In இங்கிலாந்து April 22, 2019 10:45 am GMT 0 Comments 2393 by : Anojkiyan

இலங்கையில் நடந்த பயங்கரவாத குண்டு தாக்குதலில் உயிரிழந்த பிரித்தானியா குடும்பத்தின் ஒளிப்படம், வெளியாகியுள்ளது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பு- சன்ங்ரிலா நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த குண்டுத் தாக்குதலில், பிரித்தானியாவை சேர்ந்த நான்கு பேர் கொண்ட குடும்பத்தில் தாய் மற்றும் மகன் உயிரிழந்தனர்.
42 வயதான அனிடா என்ற தாயும், 11 வயது மகனான அலெக்ஸ் என்பவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மேலும், தந்தையான பென் நிக்கோல்சன் என்பவர் சிறிய அளவிலான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதோடு, இளைய மகள் பற்றிய எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
ஈஸ்டர் தினமான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இலங்கையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் மற்றும் பொது இடங்கள் என நாட்டின் பல்வேறு 8 இடங்களில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில், இதுவரை 290இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு, 500 இற்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில், இந்தியா, சீனா, பெல்ஜியம், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த 32 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.