பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் : ருவிட்டர் ஒப்புதல்

ருவிட்டர் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் அவர்களின் அனுமதியின்றி விளம்பரங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதை ஒப்புக்கொண்டுள்ளது.
அந்தக் குறைபாடு பற்றி அண்மையில் கண்டுபிடித்ததாகவும் அதனை நேற்று முன்தினம் சரிசெய்துவிட்டதாகவும் ருவிட்டர் தெரிவித்துள்ளது.
இருப்பினும், அது யார் யாரையெல்லாம் பாதித்திருக்கலாம் என்பது உறுதிசெய்யப்படவில்லை என்று அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது
பயனர்கள் வசிக்கும் நாட்டின் குறியீட்டு எண், அவர்கள் பயன்படுத்தும் தொலைத்தொடர்புச் சாதனம் உள்ளிட்ட சில தனிப்பட்ட தகவல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.