பராக்கிரம சமுத்திரத்தின் வான் கதவுகள் திறப்பு: மக்களுக்கு எச்சரிக்கை
In இலங்கை March 12, 2018 9:37 am GMT 0 Comments 1417 by : Yuganthini

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மழைக்காலநிலையால் பராக்கிரம சமுத்திரத்தின் 8 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக, நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
பொலன்னறுவை, பராக்கிரம சமுத்திரத்தின் 8 வான் கதவுகள் இன்று (திங்கட்கிழமை) திறந்து விடப்பட்டுள்ளன.
குறித்த வான் கதவுகள் 1அடி அளவுக்கு திறக்கப்பட்டுள்ளமையினால், விநாடிக்கு 120 கனவளவு நீரானது அம்பன் கங்கையின் ஊடாக மகாவலி கங்கைக்கு வெளியேற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் தமன்கடுவ மற்றும் லங்கபுர ஆகிய பகுதிகளில் வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நீர்பாசன நிலையத்தினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.