பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தலைமையில் கிறிஸ்மஸ் ஆராதனை!

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் ஆராதனையில் உலகளாவிய ரீதியில் பல மில்லியன் மக்கள் பங்கெடுத்துள்ளனர்.
வத்திக்கானில் உள்ள புனித பேதுருவானவர் சதுக்கத்தில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தலைமையில் நேற்று நள்ளிரவு குறித்த ஆராதனை நடைபெற்ற நிலையில், உலகளாவிய ரீதியில் பல மில்லியன் மக்கள் நேரலை வழியாக குறித்த ஆராதனையில் பங்கெடுத்துள்ளனர்.
இத்தாலியில் கிறிஸ்மஸ் புதுவருட விடுமுறையினையொட்டி புதிய முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ஆயர்கள் மற்றும் குருவானவர்களுடன் குறித்த ஆராதனை இடம்பெற்றுள்ளது.
குறித்த ஆராதனையின் போது பரிசுத்த பாப்பரசர் தனது கிறிஸ்மஸ் செய்தியினை உலக மக்களுக்கு அறிவித்தார்.
குறித்த செய்தியில், கிறிஸ்துவின் பிறப்பானது ஒவ்வொரு வருடமும் நாம் மீள்பிறப்பதற்காகவும், நம்மை அடையாளம் கண்டுகொள்ளல் மற்றும் சவால்களை எதிர்கொள்வதற்கான உறுதியினை அடைவதற்காகவும் நிகழும் அற்புதம் என தெரிவித்தார்.
மேலும், நம்மை கடவுளின் குழந்தைகளாக மாற்றுவதற்காகவே கிறிஸ்து தானும் குழந்தையாக அவதரித்தார் என பரிசுத்த பாப்பரசர் இதன்போது தெரிவித்தார்.
மேலும் கடவுள் நமக்கு கிறிஸ்மஸ் பரிசாக ஓர் பொருளை வழங்கவில்லை மாறாக தமது ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்கு பாத்திரமான ஒரே மகனை வழங்கினார் என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.