பரிஸின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

பிரான்ஸ் தலைநகர் பரிஸின் சில இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
‘டைகர்’ என அழைக்கப்படும் ஆபத்தான நுளம்பு பரவி வருகின்றது.
இந்தநிலையில் பரிஸ் உட்பட நாட்டின் 66 மாவட்டங்களுக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த 66 மாவட்டங்களில் 9 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், எஞ்சியுள்ள ஏனைய மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இல்-து-பிரான்சுக்குள் Seine-et-Marne, Essonne மற்றும் Seine-Saint-Denis ஆகிய மாவட்டங்களும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.