பரிஸின் முக்கிய இடங்களில் 60,000 பொலிஸார் குவிப்பு!
பரிஸின் முக்கிய இடங்களில் 60,000 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
யெலோ வெஸ்ட் அமைப்பினர் தொடர்ச்சியான 23ஆவது வாரமாகவும் இன்று(சனிக்கிழமை) போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்தநிலையிலேயே வன்முறைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் 60,000 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்றைய போராட்டத்தில் வன்முறைகள் இடம்பெறாமல் தவிர்ப்பதற்காக பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய தினம் சோம்ப்ஸ்-எலிசேக்குள் போராட்டத்தில் ஈடுபட தடைவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், ஜனநாயகத்தை உறுதிபடுத்துமாறும் வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.