பரிஸில் பலத்த காற்றால் விளையாட்டரங்குக்கு பலத்த சேதம்!

பரிஸில் பலத்த காற்று வீசியதால் டச்சு அணியின் AZ Alkmaar’s என்ற விளையாட்டரங்கின் மேற்கூரையில் ஒருபகுதி சரிந்து வீழ்ந்துள்ளது.
எவ்வாறாயினும் விளையாட்டரங்கின் கூரை சரிந்து வீழ்ந்த போது அரங்கில் யாரும் இருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
17,000 இருக்கைகளைக் கொண்டுள்ள அந்த விளையாட்டரங்கு 13 ஆண்டுகளுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்டது. அரங்கம் சேதமடைந்த ஔிப்படங்களைப் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அரங்கின் கூரை சரிந்தது அதிர்ச்சியாக இருந்தாலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது நிம்மதியளிப்பதாக அரங்கின் பொது நிர்வாகி தெரிவித்தார்.
அரங்கின் பாதுகாப்புக்கு உறுதியளிக்கப்படும் வரை, அங்கு விளையாட்டு நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெற அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.