பரிஸ் தேவாலய புனரமைப்பிற்கு நிதியுதவி வழங்கிய சிறுமியின் நெகிழ்ச்சியூட்டும் கடிதம்!
In இங்கிலாந்து April 29, 2019 6:00 am GMT 0 Comments 2938 by : Benitlas

பரிஸின் புகழ்பெற்ற நோட்ரே டாம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்து உலகளவில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருந்தது.
இந்தநிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த கெயித்லின் என்ற 9 வயது சிறுமி தன்னுடைய சேமிப்பில் இருந்து 3 அமெரிக்க டொலரை பரிஸின் நோட்ரோ டாம் தேவாலயத்தை சீரமைக்க நன்கொடையாக வழங்கியுள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பரிஸிலுள்ள 850 ஆண்டுகள் பழமையான நோட்ரே டாம் தேவாலயத்தில், கடந்த 15 ஆம் திகதி பாரிய தீ விபத்து ஏற்பட்டது.
தீயின் கோரப்பிடியில் சிக்கி, நோட்ரே டாம் தேவாலயத்தின் பெரும் பகுதி சிதைவடைந்துள்ளது.
பிரான்சின் வரலாற்றுச் சின்னமாக பார்க்கப்படும் இத் தேவாலயம், ஏற்கனவே இருந்ததை விட அதிக அழகுடன் மீண்டும் கட்டியெழுப்பப்படும் என பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
எதிர்வரும் 5 ஆண்டுகளுக்குள் இது சாத்தியமாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ள அவர், தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகளுக்காக சர்வதேச அளவில் நிதி திரட்டி வருகிறார். உலகம் முழுவதிலும் இருந்து நிதி குவிந்து வருகிறது.
இந்த நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த கெயித்லின் என்ற 9 வயது சிறுமி தன்னுடைய சேமிப்பில் இருந்து 3 அமெரிக்க டொலரை பரிஸ் நோட்ரோ டாம் தேவாலயத்தை சீரமைக்க நன்கொடையாக வழங்கியுள்ளார்.
பரிஸிலுள்ள நிதி திரட்டும் அமைப்புக்கு 3 அமெரிக்க டொலரையும், ஒரு கடிதம் ஒன்றையும் தபால் மூலம் குறித்த சிறுமி அனுப்பி வைத்துள்ளார்.
இதன்போது அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் ‘நோட்ரே டாம் தேவாலயத்தின் தீ விபத்து குறித்து, வானொலி மூலம் அறிந்து மனமுடைந்து போனேன்.
என்னால் முடிந்த உதவியை செய்ய விரும்பினேன். எனக்கு தெரியும் இது பெரிய தொகை இல்லை.
ஆனால் இதுபோன்ற ஒவ்வொரு சிறியதொகையும் தேவாலயத்தை விரைவாக சீரமைக்க உதவும் என நம்புகிறேன்’ என கூறியுள்ளார் அந்தச் சிறுமி.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.