பரீட்சை நிலையங்களில் மேலதிக பொறுப்பதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை!

கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை நிலையங்களில் மேலதிக நிலைய பொறுப்பதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக இரண்டாயிரத்து 268 பேரை நியமனம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சை முறைகேடுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இதற்காக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள், அரச மற்றும் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஆகியோர் இந்த பரீட்சைக் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இவ்வாறு நியமிக்கப்படும் மேலதிக பரீட்சை நிலையப் பொறுப்பாளர்களது பிரதான பணியாக பரீட்சை நடவடிக்கைகளைக் கண்காணிப்பது காணப்படும் எனவும் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.
உயர் தரப் பரீட்சை எதிர்வரும் மாதம் 06 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த பரீட்சையில், மூன்று இலட்சத்து 14 ஆயிரத்து 69 பேர் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.