பருத்தித்துறை நீதிமன்ற நியாயாதிக்கத்திற்குள் பொதுக்கூட்டங்களை கூட்டுவதற்கு தடை
In இலங்கை November 26, 2020 8:26 am GMT 0 Comments 1447 by : Dhackshala
பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நியாயாதிக்கத்திற்குள் பொதுக்கூட்டங்களை கூட்டுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பருத்தித்துறை நீதிமன்ற நியாயாதிக்கத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நவம்பர் 25ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் பொலிஸாரால் விண்ணப்பங்கள் செய்யப்பட்ட நிலையில், அது தொடர்பிலான விசாரணைகள் நேற்றைய தினம் நடைபெற்றது.
நேற்றைய தினம் நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து, இன்றைய தினத்திற்கு கட்டளைக்காக வழக்கு திகதியிடப்பட்டது.
அதன் பிரகாரம் இன்றைய தினம் வழக்கு திறந்த மன்றில் அழைக்கப்பட்டு, மன்றின் நியாயாதிக்க எல்லைக்குள் எந்தவிதமான பொதுக்கூட்டங்களையும் நடத்த முடியாது என அறிவித்து பொதுக்கூட்டம் கூடுவதற்கு மன்று தடைவிதித்தது.
அதனை அடுத்து குறித்த வழக்கு தொடர்பிலான விரிவான விசாரணைக்காக எதிர்வரும் 4ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.