பேர்மிங்ஹாம் கத்திக்குத்து: இளைஞன் கைது
In இங்கிலாந்து April 25, 2019 4:48 am GMT 0 Comments 1562 by : Risha

பேர்மிங்ஹாம் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேர்மிங்ஹாமின் தென்மேற்கு பகுதியான ஹார்போர்னிலிருந்து பலத்த கத்திக்குத்து காயங்களுடன் இளைஞரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
நேற்று (புதன்கிழமை) பிற்பகல் வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது. இதனையடுத்து இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்த பேர்மிங்ஹாம் பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 19 வயதுடைய ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, உயிரிழந்தவர் 18 வயதுடையவர் என அடையாளங் காணப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.