பேர்மிங்ஹம் நகருக்கு இளவரசர் ஹரி விஜயம்
In இங்கிலாந்து March 9, 2018 6:50 am GMT 0 Comments 1647 by : Suganthini
எதிர்வரும் மே 19ஆம் திகதி திருமண பந்தத்தில் இணையவுள்ள பிரித்தானிய இளவரசர் ஹரியும், அவரது வருங்கால மனைவியான மேகன் மாக்கிலும், மத்திய இங்கிலாந்தின் பேர்மிங்ஹம் (Birmingham) நகருக்கு விஜயம் செய்துள்ளனர்.
தமது திருமணத்துக்கு முன்னரான சுற்றுப்பயணமாக, பேர்மிங்ஹம் நகருக்கு நேற்று (வியாழக்கிழமை) இவர்கள் இருவரும் விஜயம் செய்துள்ள நிலையில், இவர்களுக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
தமது விஜயத்தின்போது, சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மாணவிகளையும் அவர்கள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அடுத்த பெண் சந்ததியினரை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு திட்டங்களை இவர்கள் முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.