பலஸ்தீனியரின் தாக்குதலுக்குள்ளான இஸ்ரேல் நாட்டவர் உயிரிழப்பு
In உலகம் September 17, 2018 7:23 am GMT 0 Comments 1515 by : Farwin Hanaa
மத்தியதரைக் கடலுக்கு அருகிலுள்ள வெஸ்ட் பான்க் பிராந்தியத்தில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான இஸ்ரேல் நாட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் பலஸ்தீனிய பிரஜையொருவரின் கத்துக்குத்து தாக்குதலுக்கு இலக்கான குறித்த இஸ்ரேல் பிரஜை, நேற்று மாலை உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
கொலையுண்டவர், அமெரிக்காவில் பிறந்து இஸ்ரேலில் குடியேறிய பிரபல வழக்கறிஞர் எரி ஃபுள்ட் (வயது-45) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
யூத மதத்தினைச் சேர்ந்த எரி ஃபுள்ட்டின் பூதவுடல், குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் சூழ நேற்று மாலையே நல்லடகம் செய்யப்பட்டது.
கத்திக்குத்து தாக்குதலை நடத்தியவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி, பொலிஸார் அவரை கைதுசெய்துள்ளனர். சந்தேகநபர் வெஸ்ட் பான்க் கிராமத்தைச் சேர்ந்த 17 வயதானவரென தகவல்கள் வெளியாகியுள்ளன. பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அவரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கொல்லப்பட்ட எரி ஃபுள்ட் -இன் டுவிட்டர் பதிவிற்கு இணங்க, எதிர்வரும் நவம்பர் மாதம் அவர் விரிவுரையொன்றை நிகழ்த்த அமெரிக்காவிற்கு பயணிக்கவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வெஸ்ட் பான்க் பிராந்தியமானது, இஸ்ரேல் – பாலஸ்தீன எல்லையில் மத்தியதரைக் கடலுக்கு அருகில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.