பலஸ்தீனுக்கான ஆதரவு தொடரும்: சுவீடன்

பலஸ்தீனுக்கான தமது ஆதரவு தொடரும் என, சுவீடன் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், பலஸ்தீனை உத்தியோகப்பூர்வமாக அங்கீகரித்தமையை எண்ணி பெருமை கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பலஸ்தீன அரசாங்கத்தை அங்கீகரித்த முதலாவது ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினராக சுவீடன் விளங்குகின்ற நிலையில், தமது நிலைப்பாட்டை பலரும் பின்தொடர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், உரிய தருணத்தில் பலஸ்தீனை அங்கீகரித்துள்ளதாகவும், அந்தவகையில் பலஸ்தீனுக்காக தமது ஆதரவு தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.