பலாலி விமான நிலையத்தைப் பார்வையிட சென்ற சிறுவர்களுக்கு படையினர் தேநீர் உபசாரம்!

பலாலி விமான நிலையத்தைப் பார்வையிட சென்ற கோப்பாய் மத்திய வெல்லுருவை பிள்ளையார் முன்பள்ளி சிறுவர்களுக்கு, பாதுகாப்புப் படையினர் தேநீர் உபசாரம் வழங்கிய சம்பவம் அனைவரினதும் பாராட்டுக்குள்ளாகியுள்ளது.
குறித்த செயல் நல்லிணக்கத்திற்கு ஒர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாகவும், இதனை பாராட்டியே ஆக வேண்டுமெனவும் பலர் சமூகவலைதளங்களில் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இராணுவ உயர் பாதுகாப்பு கட்டுப்பாட்டு வலயமாக காணப்பட்டு வரும் பலாலி விமான நிலையத்தைப் பார்வையிடுவதற்காக கோப்பாய் மத்திய வெல்லுருவை பிள்ளையார் முன்பள்ளி சிறுவர்கள் 46 பேரும் ஆசிரியர்கள் 02 பேரும் பெற்றோர்கள் 41 பேரும் இன்று (சனிக்கிழமை) சென்றிருந்தனர்.
இதன்போது அவர், விமான நிலையத்தை பார்வையிட்டதோடு, அங்குள்ள விமானங்களில் ஏறி புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.