பல்கலைக்கழங்களில் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம்!
In இங்கிலாந்து March 15, 2018 10:34 am GMT 0 Comments 1574 by : Suganthini

பிரித்தானியாவிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை, எதிர்வரும் 12 வருடங்களில் அதிகரித்துக் காணப்படுமென, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், எதிர்வரும் 12 வருடங்களில், பல்கலைக்கழங்களில் கற்கும் மாணவர்களின் 3 லட்சத்துக்கும் அதிகமாகக் காணப்படுமெனவும், அவர்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை, எதிர்வரும் 2030ஆம் ஆண்டளவில் 18 வயதுக்கும் மேற்பட்ட மாணவர்களின் கற்றல் நடவடிக்கை பல்கலைக்கழங்களில் சுமார் 50 ஆயிரமாக அதிகரித்துக் காணப்படுமென, உயர்கல்விக் கொள்கைக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பல்கலைக்கலைக்கழகங்களுக்கான நிதியுதவித் திட்டம் மற்றும் கட்டண அறவீடு தொடர்பாக, பிரித்தானிய அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய உத்தேசித்துள்ளது.
கடந்த வருடத்தில் பிரித்தானியாவிலுள்ள பல்கலைக்கழகங்களில் 3 வருடகால கற்கைநெறிகளுக்கு, 5 லட்சத்து 34 ஆயிரம் மாணவர்கள் இணைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.