பல இலட்சம் பெறுமதியான வல்லப்பட்டைகளுடன் ஒருவர் கைது!

சட்ட விரோதமாக 25.4 கிலோ எடையுடைய சுமார் 14 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வல்லப்பட்டைகளை டுபாய் நாட்டுக்கு கொண்டுசெல்ல முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டதாக சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயவர்தன தெரிவித்தார்.
கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய வர்த்தகரின் பயணப் பொதியை சோதனையிட்ட போதே குறித்த வல்லப்பட்டை கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும் சுங்க அதிகாரிகள் குறித்த வர்த்தகருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதுடன் வல்லப்பட்டையை அரச உடைமையாக்கியுள்ளதாக சுனில் ஜயவர்தன மேலும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.