சர்ச்சைகளை கடந்து ‘மெரினா புரட்சி’ திரைப்படத்தை வெளியிட அனுமதி!
In சினிமா May 7, 2019 5:13 am GMT 0 Comments 1458 by : adminsrilanka

எம்.எஸ்.ராஜ் இயக்கத்தில் உருவாகன ‘மெரினா புரட்சி’ திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக தணிக்கை குழுவினர் 2 முறை தடை விதித்த நிலையில் தற்போது வெளியிட அனுமதி கிடைத்துள்ளது.
இத்திரைப்படத்தில் நவின்குமார், சுருதி உள்ளிட்ட பல புதுமுகங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் சர்ச்சை காட்சிகள் இருப்பதாக தணிக்கை குழுவினர் 2 முறை தடை விதித்தனர்.
இதை எதிர்த்து படக்குழுவினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், படத்துக்கு அனுமதி வழங்குவது குறித்து தணிக்கை குழு 7 நாட்களில் முடிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைதொடர்ந்து மறு ஆய்வு குழுவினர் ஐதராபாத்தில் மெரினா புரட்சி படத்தை பார்த்து விட்டு திரையிட அனுமதி வழங்கியுள்ளனர்.
அந்தவகையில், இந்த மாதம் இறுதியில் மெரினா புரட்சி படம் திரைக்கு வரவுள்ளது. இதுகுறித்து திரைப்படத்தின் இயக்குநர் எம்.எஸ்.ராஜ் கருத்து தெரிவிக்கையில்,
“மெரினா கடற்கரையில் 2017ம் ஆண்டு ஜனவரியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 8 நாட்கள் நடந்த போராட்டத்தின் பின்னால் உள்ள உண்மைகளையும், அரசியலையும் அப்படியே மெரினா புரட்சி படத்தில் காட்சிப்படுத்தினேன். இந்த படத்துக்கு எதிராக பீட்டா அமைப்பு கடிதம் அனுப்பியது. இதனால் தணிக்கை குழு 2 தடவைகள் படத்துக்கு தடைவிதித்தது.
நீதிமன்றத்தின் ஊடாக இப்போது அனுமதி பெற்று இருக்கின்றோம். தணிக்கைக் குழுவால் படம் வெளியாவதில் 9 மாதங்கள் தாமதம் ஏற்பட்டு பண நஷ்டமும் மன உளைச்சலும் ஏற்பட்டது.
இது தமிழர்களின் எழுச்சியை பற்றிய படம். இந்த மாத இறுதியில் 11 நாடுகளில் திரைக்கு வருகிறது” எனக் கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.