பழங்குடியினர் விவகாரம் – ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியது தேர்தல் ஆணையம்!
In இந்தியா May 2, 2019 4:39 am GMT 0 Comments 2237 by : Krushnamoorthy Dushanthini

மத்திய அரசு பழங்குடியின மக்களை சுட்டுக்கொல்ல புதிய சட்டம் கொண்டுவந்துள்ளதாக விமர்சித்திருந்தமை தொடர்பில், விளகக்கமளிக்குமாறு தேர்தல் ஆணையம் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்திய நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதான கட்சிகளான பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தொடர் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன. அந்தவகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஷாடோல் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூடத்தின்போது மத்திய அரசு எதிரான கருத்துக்களை தெரிவித்தாக பா.ஜ.க சார்பில் தேர்தல் ஆணையத்திடம் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.
குறித்த முறைப்பாட்டினை விசாரணை செய்த தேர்தல் ஆணைக்குழு இரண்டு நாட்களுக்குள் ராகுல் காந்தி உரிய விளக்கமளிக்காவிட்டால் கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.