பழனிசாமியின் ஆட்சியே மிகவும் மோசமான ஆட்சி: தினகரன்
In இந்தியா May 3, 2019 5:24 am GMT 0 Comments 2364 by : Yuganthini

சுதந்திரத்துக்கு பின்னர் தமிழகத்தில் நடைபெற்ற மிகவும் மோசமான ஆட்சியென்றால், அது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியென அ.ம.மு.க தலைவரும் ஆர்.கே.சட்டமன்ற உறுப்பினருமான தினகரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
திருப்பரங்குன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபடும்போதே தினகரன் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“தேர்தலை வெற்றிகொள்ள முடியாதென்ற பயமே, புயலை காரணம் காட்டி குறித்த தொகுதிக்கான இடைத் தேர்தலை நடத்தாமல் அரசு காலம் தாழ்த்தி வந்தது.
இதேவேளை குடிப்பதற்கும் விவசாயத்துக்கும் நீர் இல்லை. கர்நாடகாவில் இருந்து வரும் உபரி நீரை கூட சேமித்து வைக்க முடியவில்லை.
இதற்கெல்லாம் காரணம் தமிழகத்தில் தற்போது நடைபெறும் மோசமான ஆட்சியே ஆகும்.
அதாவது சுதந்திரத்துக்குப் பின்னர் இதுபோன்ற மோசமான ஆட்சி நடைபெறவில்லையென கூறுமளவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் ஆட்சி செய்து வருகின்றார்கள்.
அவர்களுக்கு, தங்களின் ஆட்சி அதிகாரங்களே முக்கியமே ஒழிய மக்களைப் பற்றி எந்ததொரு கவலையும் இல்லை. அவர்களுக்கு தமிழக மக்களைப் பற்றி எந்த கவலையும் இல்லை” என தினகரன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.