பேருந்து கட்டணம் திருத்தம் பற்றிய இறுதி முடிவு இன்று
In இலங்கை September 17, 2018 2:13 am GMT 0 Comments 1767 by : Yuganthini

பேருந்து கட்டணம் திருத்தம் பற்றிய இறுதி தீர்மானத்தை இன்று (திங்கட்கிழமை) எதிர்பார்ப்பதாக அனைத்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் எரிபொருள் விலை உயர்வடைந்துள்ளது. இந்நிலையில் பேருந்து கட்டணமும் அதிகரிக்கப்பட வேண்டுமென அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையை தீர்க்க அரசாங்கத்துக்கு மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. இருப்பினும் எந்ததொரு சரியான பதிலையும் வழங்கவில்லையெனவும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால் எது எவ்வாறாயின் இன்று குறித்த பிரச்சினைக்கு இறுதி தீர்மானம் முன்வைக்கப்படுமென அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, படகு உரிமையாளர்கள் சங்கம் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக மீன்பிடி நடவடிக்கைகளில் இருந்து விலக முடிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.