பாகிஸ்தானின் அத்துமீறல் குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்!
In இந்தியா February 9, 2021 4:30 am GMT 0 Comments 1279 by : Krushnamoorthy Dushanthini

காஷ்மீர் எல்லையில் 2020 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் 5 ஆயிரத்து 133 முறை அத்துமீறியுள்ளதாக ராஜ்யசபாவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்த அத்துமீறல் சம்பவத்தில் 46 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தொடர்ந்து தெரிவித்த அவர், “காஷ்மீரில் சர்வதேச கட்டுப்பாட்டு எல்லை பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறி பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
எல்லையில் அத்துமீறுபவர்களுக்கு பாதுகாப்பு படையினர் பொருத்தமான பதிலடி கொடுத்து வருகின்றனர். கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லையின் புனிதத்தன்மையை பாகிஸ்தான் கடைபிடிக்க வேண்டும்.
பயங்கரவாதிகளை அனுப்புகிறது கொரோனா வைரஸ் தொற்று இருந்தபோதிலும் பாகிஸ்தான் காஷ்மீர் கட்டுப்பாட்டுக் கோட்டில் அத்துமீறிய தாக்குதல் நடத்தி வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.