பாகிஸ்தானின் 13 ஆவது ஜனாதிபதியாக அரிஃப் அல்வி தேர்வு!
In ஆசியா September 5, 2018 3:47 pm GMT 0 Comments 1631 by : ஜெயச்சந்திரன் விதுஷன்

பாகிஸ்தானின் 13 ஆவது ஜனாதிபதியாக அரிஃப்-உர்-ரஹ்மான் அல்வி தேர்வாகியுள்ளார். பாகிஸ்தானின் ஜனாதிபதி தேர்தல் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.
இந்த தேர்தலில், இம்ரான் கானின் கட்சி சார்பில் அரிஃப்-உர்-ரஹ்மான் அல்வியும், எதிர்க்கட்சிகளின் சார்பில், முத்தஹிதா அமலும் போட்டியிட்டனர்.
பஞ்சாப், சிந்து, ஹைபர், பலுசிஸ்தான் உள்ளிட்ட நான்கு மாகாணங்களின் சட்டசபைகளிலும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்திலும் தேர்தல் நடைபெற்றது.
இதில் மொத்தமாக பதிவான 1100 வாக்குகளில், தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி வேட்பாளர் அரிஃப்-உர்-ரஹ்மான் அல்வி, 353 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
வரும் ஒன்பதாம் திகதி, பாகிஸ்தான் ஜனாதிபதியாக அரிஃப்-உர்-ரஹ்மான் அல்வி பதவியேற்கவுள்ளார். வெற்றிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அரிஃப் அல்வி, தனக்கு இந்த வாய்ப்பினை வழங்கிய பிரதமர் இம்ரான் கானுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.