பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்த கடற்படை தளபதி மரணம்
In இந்தியா November 5, 2018 4:02 am GMT 0 Comments 1429 by : Yuganthini

இந்தியா- பாகிஸ்தான் இடையே 1971ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியா வெற்றியடைவதற்கு முக்கிய பங்கினை வகித்த கடற்படை தளபதி மனோகர் பிரஹலாத் வயது முதிர்வால் காலமாகியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், வின்சர்னி பகுதியில் வசித்து வந்த இவர், தனது 91ஆவது வயதில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலமாகியுள்ளார்.
மனோகர் பிரஹலாத், கடற்படை தளபதியாக பதவி வகித்த காலப்பகுதிகளில் வீர் சக்ரா விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
இதேவேளை மனோகர் பிரஹலாத் மரணம் குறித்து பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது, “1971ம் ஆண்டு போரில் கதாநாயகனாக செயல்பட்ட மனோகர் பிரஹலாத், மரண செய்தி கேட்டு துயரம் அடைந்தேன். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.