பாகிஸ்தானுக்கு 6 பில்லியன் டொலர் நிதியுதவி – சவுதி அரேபியா!
In ஆசியா October 24, 2018 3:26 pm GMT 0 Comments 1496 by : ஜெயச்சந்திரன் விதுஷன்

ஊடகவியலாளர் கொல்லப்பட்ட நிலையில் பாகிஸ்தான் பிரதமர், சவுதி அரேபியாவிடம் இருந்து 6 பில்லியன் நிதியுதவி பெற்றுள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் ஊடகவியலாளர் ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டதை கண்டித்து, பல்வேறு நாடுகளின் தலைவர்கள் முதலீட்டு மாநாட்டை புறக்கணித்தது
இந்நிலையில் சவுதி அரேபியாவின் சிறப்பு அழைப்பை ஏற்று, நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகிய எதிர்கால முதலீட்டு தொடக்க மாநாட்டில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பங்கேற்றிருந்தார்.
இந்நிலையில், கச்சா எண்ணெய் கடன்களை செலுத்த 3 பில்லியன் டொலரும், இதர செலவீனங்களுக்கு 3 பில்லியன் டொலரும் நிதி உதவி வழங்க சவுதி அரேபியா அரசு முன்வந்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.