பாகிஸ்தான் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் படுகாயம்!
In இந்தியா January 15, 2019 9:48 am GMT 0 Comments 1415 by : Ravivarman

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் இராணுவத்தினர் இன்று மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
ஜம்மு பகுதிக்குட்பட்ட ரஜோரி மாவட்டத்தின் சுந்தர்பானி செக்டர் பகுதியில் உள்ள இந்திய கண்காணிப்பு சாவடிகளின் மீது இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சுமார் பத்து மணியளவில் பாகிஸ்தான் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இதனையடுத்து இரு தரப்பினருக்குமிடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் இந்திய இராணுவத்தின் வீரர் ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த பிரதேசத்தில் துப்பாக்கிச் சண்டை பல மணிநேரம் நீடித்ததாக இந்திய இராணுவத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.