பாகிஸ்தான்- தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில் பதிவான சாதனைகள்!

பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், பல சாதனைகள் பதிவாகியுள்ளன.
கராச்சியில் நடைபெற்ற இப்போட்டியில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் அணித்தலைவர் பொறுப்பை வகித்த முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றவர் என்ற பெருமையைப் பாகிஸ்தானின் பாபர் ஆஸம் பெற்றுள்ளார்.
தென்னாபிரிக்காவுடன் இதுவரை 27 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ள பாகிஸ்தான் அணி, தற்போது 5ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது.
ஆசிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தொடர்ச்சியாக 8ஆவது தோல்வியை தென்னாபிரிக்கா சந்தித்துள்ளது.
கராச்சி டெஸ்டில் பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர்களான யாசிர் ஷா, நௌமான் அலி ஆகிய இருவரும் சேர்ந்து 14 விக்கெட்டுகளை சாய்த்துள்ளனர்.
கராச்சி டெஸ்டின் 4ஆவது இன்னிங்ஸில் பாகிஸ்தானின் நௌமான் அலி 5 விக்கெட்டுகளை சாய்த்தன்மூலம் கடந்த 72 ஆண்டுகளில் அறிமுக டெஸ்ட் போட்டியில் ஓர் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய மூத்த வீரர் (34 வயது 111 நாள்கள்) என்ற பெருமையைப் அவர் பெற்றுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.