பாகிஸ்தான் பிரதமரை வரவேற்பதற்கு ஒத்திகை
In இலங்கை February 19, 2021 11:29 am GMT 0 Comments 1176 by : Yuganthini

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமரை வரவேற்க கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஒத்திகைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த ஒத்திகை நிகழ்வுகளை, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேரில் சென்று கண்காணித்துள்ளார்.
மேலும்,பாகிஸ்தான் பிரதமரின் வருகையை ஏற்பாடு செய்வதற்கு நாட்டுக்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு மற்றும் அரச அதிகாரிகளுடன் அவர் உரையாடியுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.