பாகிஸ்தான் விடயத்தில் வாஜ்பாய் பாதையை மோடி பின்பற்றுவார்!- பரூக் அப்துல்லா
In இந்தியா September 9, 2018 3:23 am GMT 0 Comments 1545 by : Yuganthini

இந்தியா- பாகிஸ்தான் இடையில் நட்புறவை மேம்படுத்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பாதையை பிரதமர் நரேந்திர மோடி பின்பற்றுவாரென, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்
தேசிய மாநாட்டு கட்சி நிறுவனரான ஷேக் முகம்மது அப்துல்லாவின் 36ஆவது நினைவு தினத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,
“பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்றுள்ள நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான உறவு மேம்படுத்தக் கூடிய வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது.
இந்தவகையில் இருநாடுகளுக்கு இடையேயும் இணக்கமான சூழல் உருவாகும்போது தான் காஷ்மீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைப்பதுடன் பிராந்திய வளர்ச்சியும் ஏற்படும்.
ஆகையால் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பாதையை பின்பற்றி பிரதமர் மோடியும் பாகிஸ்தானுடனான நட்புறவை மேம்படுத்துவார்” என நம்புவதாக பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.