பாடசாலைகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியானது
In இலங்கை December 21, 2020 6:04 am GMT 0 Comments 1883 by : Dhackshala
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளைத் தவிர நாட்டின் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
தரம் 1-5 வரையான மாணவர்களுக்கான கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகளே ஜனவரி மாதம் 11 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அதேபோன்று முன்பள்ளி மாணவர்களுக்கான கற்றல் மற்றும் கற்பித்தல் செயற்பாடுளும் ஜனவரி 11 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.