பாடசாலை ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை
In இலங்கை February 8, 2021 8:56 am GMT 0 Comments 1414 by : Dhackshala

பாடசாலை ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சுகாதார பிரிவிடம் கலந்துரையாடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “குறித்த தடுப்பூசியை ஆசிரியர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என நான் பரிந்துரைத்துள்ளேன்.
காரணம் என்னவென்றால் ஆசிரியர்கள் அவதான நிலையில் உள்ளனர். பலருடன் நாளாந்தம் பழகுகின்றனர்.
இதன் காரணமாக ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பை வழங்குவது நமது கடமையாகும். எனது கருத்தை நான் முன்வைத்துள்ளேன்.
லலித் வீரதுங்கவிடம் இது தொடர்பில் பேசியுள்ளேன். ஆசிரியர்களுக்கும் இதனை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
பெப்ரவரி மாதத்தின் இறுதியில் அல்லது மார்ச் மாத ஆரம்பத்தில் ஆசிரியர்களுக்கு தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் எனக்கு கூறியுள்ளார்” என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.