பாடசாலை உரிமையாளருக்கு வெடிகுண்டை பரிசாக அனுப்பிய மாணவன்
In இப்படியும் நடக்கிறது October 18, 2018 9:56 am GMT 0 Comments 1442 by : Litharsan

குஜராத் மாநிலத்திலுள்ள தனியார் பாடசாலை ஒன்றின் உரிமையாளருக்கு அப்பாடசாலையில் கற்ற மாணவன் ஒருவர் வெடிகுண்டை பரிசாக அனுப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து இதனை அனுப்பிய பழைய மாணவனைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
குஜராத், ராஜ்கோட் மாவட்டத்தின் உப்லட்டா நகரில் அமைந்து ஸ்ரீகிருஷ்ணா பள்ளி என்ற தனியார் பாடசாலையின் உரிமையாளரான வித்தல் டொபாரியா என்பவருக்கே இப்பரிசு கிடைத்துள்ளது.
இதுதொடர்பில் தெரியவருவதாவது, குறித்த உரிமையாளருக்கு கொரியர் மூலம் ஒரு பார்சல் வந்தது. அது பரிசுப்பொருள் போன்று அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
அனுப்பியவர் முகவரியில், முன்னாள் மாணவர் என்றும், பள்ளி உரிமையாளருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அனுப்பி இருப்பதாகவும் எழுதப்பட்டிருந்தது.
பள்ளிக்கூட உரிமையாளர் டொபாரியா, அந்த பார்சலை திறந்தார். உள்ளே இருந்த பொருட்களை பார்த்து சந்தேகம் அடைந்து, அவர் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தார்.
வெடிகுண்டு என அறியப்பட்டதும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு குண்டு செயலிழக்கவைக்கப்பட்டது.
இக்குண்டு, ஜெலட்டின் குச்சிகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.