பாடசாலை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு தீர்மானம்
In இலங்கை January 7, 2021 4:18 am GMT 0 Comments 1609 by : Dhackshala

புதிய சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக பாடசாலை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது குறித்து தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சருக்கும் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கும் இடையில் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்தத் தீர்மனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வைரஸ் தொற்று அபாயம் அதிகமுள்ள மேல் மாகாணம் தவிர ஏனைய மாகாணங்களில் விளையாட்டுப்போட்டிகளை ஆரம்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ளவர்களை எக்காரணம் கொண்டும் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்ற அனுமதிக்க வேண்டாம் என்றும் இந்த கலந்துரையாடலின்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்தகைய அபாயமுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த பிள்ளைகள் விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றுவதனால் வைரஸ் பரவல் ஏற்பட முடியும் என்றும் இங்கு மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் தற்போது சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி மெய்வல்லுனர் போட்டிகள், குழு விளையாட்டுக்கள், பாடசாலை பிக் மெச் போட்டி போன்றவற்றை நடத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் நோய் அறிகுறிகளுடைய மற்றும் நோய்வாய்ப்பட்டுள்ள எந்தவொரு பிள்ளைகளையும் விளையாட்டுப் போட்டிகளுக்கு உட்படுத்தக்கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்கள் தேவைக்கேற்ப முழுமைப்படுத்தப்பட்டு முறையாக பாடசாலை விளையாட்டுப் போட்டி ஆரம்பிப்பதிலுள்ள முக்கியத்துவம் குறித்தும் இதன்போது சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.