பாதுகாப்பு மற்றும் புலனாய்வு பிரிவை மறுசீரமைக்க நடவடிக்கை – ஜனாதிபதி
In ஆசிரியர் தெரிவு April 26, 2019 5:13 am GMT 0 Comments 2541 by : Varshini
பாதுகாப்பு மற்றும் புலனாய்வு பிரிவை விரைவில் மறுசீரமைக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் தற்போது நடைபெற்றுவரும் ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின்போதே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில்-
”தாக்குதல் தொடர்பாக கடந்த ஏப்ரல் 4ஆம் திகதி அரச புலனாய்வு திணைக்களத்திற்கு தகவல் கிடைத்திருந்தது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அதனை பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. தேசிய பாதுகாப்பு பிரதானி, அதுகுறித்து பொலிஸ்மா அதிபருக்கு தகவல் வழங்கியுள்ளார். கடந்த 5ஆம் திகதி பொலிஸ்மா அதிபர் அதனை 5 பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு வழங்கியுள்ளார். இந்த 5 பிரதி பொலிஸ்மா அதிபர்களும் சரியாக செயற்படவில்லை.
ஆனால் 16ஆம் திகதி பிரதி பொலிஸ்மா அதிபர் தசநாயக்க, பிரபுக்கள் பாதுகாப்பு தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கிய கடிதத்தை 21ஆம் திகதி நான் சிங்கப்பூரில் இருக்கும்போது சமூக ஊடகங்கள் வாயிலாகவே அறிந்தேன்.
பாதுகாப்பு செயலாளரும் பொலிஸ்மா அதிபரும் தமது பொறுப்பை சரிவர நிறைவேற்றவில்லை. புலனாய்வு பிரிவு பலவீனமடைந்துள்ளது. இதற்கான பொறுப்பை ஏற்று பொலிஸ்மா அதிபர் இன்று பதவி விலகுவார் என எதிர்பார்க்கின்றேன்” என்றார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.