பாபநாசம் அருகே இதுவரை வாக்குப்பதிவு ஆரம்பமாகவில்லை என தகவல்!

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே ஒரு வாக்குச்சாவடியில் 4 மணி நேரம் ஆகியும் இதுவரையில் வாக்குப்பதிவு ஆரம்பமாகவில்லை என தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 30.62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள அருண்மொழிப்பேட்டை வாக்குச்சாவடியில் 4 மணி நேரம் ஆகியும் இதுவரையில் வாக்குப்பதிவு ஆரம்பமாகவில்லை.
வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்ய அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.