பாலஸ்தீனிய பெண்ணை சுட்டுக்கொன்ற இஸ்ரேலிய படை – காணொளி
In உலகம் September 18, 2019 8:30 am GMT 0 Comments 2851 by : Jeyachandran Vithushan

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஒரு சோதனைச் சாவடியில் கத்தியால் குத்த முயன்ற பாலஸ்தீனிய பெண்ணை இஸ்ரேலிய பாதுகாப்புப் பணியாளர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர்.
இன்று (புதன்கிழமை) குறித்த குற்றச்சாட்டினை இஸ்ரேலிய பொலிஸார் முன்வைத்திருந்த நிலையில் பாலஸ்தீனிய சுகாதார அமைச்சு, சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு பெண் இறந்துவிட்டதாக அறிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான காணொளிகள் வெளியாகியிருந்தன, “துப்பாக்கிகளை அணிந்த வீரர்கள் ஒரு பெண்ணை எதிர்கொள்வதைக் காட்டியது. ஒரு துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்டது உடனேயே அந்த பெண் சரிந்து வீழ்ந்தார், அப்பெண்ணின் கையிலிருந்து எதோ ஒருபொருள் கீழே விழுவது.” காணொளியில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேலிய பொலிஸ் பேச்சளார் இது குறித்து ருவிற்ரரில் பதிவிட்டுள்ளார். அதில், “பெண் பயங்கரவாதி குலாண்டியா சோதனைச் சாவடியில் படையினரைக் குத்திக் கொல்ல முயன்றார்” என்று கூறினார்.
இஸ்ரேல் தொடர்ந்து மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்து வருகிறது. இதற்கு பல நாடுகளும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Israel continues to commit crimes against humanity. Israeli ZioNazi police brutally murdered a Palestinian woman. Everyone should know who the killers are – the Zionists are the biggest murderers in the world. The whole world should know that Israel does not represent Jews. pic.twitter.com/Hi9zXMRji5
— שאול בן קיש (@saulbenkish) September 18, 2019
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.