பாலியல் குற்றச்சாட்டுக்களால் சபைக்கும் இளைஞர்களுக்குமான விரிசல்: கவலை வெளியிட்ட போப் பிரான்சிஸ்
In உலகம் September 27, 2018 2:05 pm GMT 0 Comments 1569 by : ஜெயச்சந்திரன் விதுஷன்

கிறிஸ்தவ பாதிரியார்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள், சபைக்கும் இளைஞர்களுக்கும் இடையே விரிசல் அதிகரித்துவிட்டதாக கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் கவலை தெரிவித்துள்ளார்.
மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு நான்கு நாள் சுற்றுப்பயணமாக மேற்கொண்டு சென்ற போப் பிரான்சிஸ், எஸ்டோனியாவில் உரையாற்றினார்.
இதன் போது திருச்சபைகள் மீது தொடர்ந்து பாலியல் புகார்கள் கூறப்பட்டு வருவதாகவும், பென்சில்வேனியாவில், 300 பாதிரியார்களால் ஆயிரம் குழந்தைகள் பலாத்காரம் செய்யப்பட்டதாக வெளியான அறிக்கையையும் சுட்டிக் காட்டினார்.
மேலும், திருச்சபைகளை கண்காணிப்பது என்பது கத்தோலிக்க திருச்சபை நிர்வாகத்தால் முடியாத காரியம் என்றும், அதற்கு அரசுகளும் உதவி செய்ய வேண்டும் எனவும் போப் பிரான்ஸிஸ் தெரிவித்தார்.
தொடர் பாலியல் குற்றச்சாட்டுகளால், திருச்சபை மீது இளைஞர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும், இளைஞர்களின் நம்பிக்கையைப் பெற திருச்சபையினர் தங்களது வழிகளை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் போப் பிரான்ஸிஸ் வலியுறுத்தினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.