News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தேசிய பெண்கள் கட்சி அறிவிப்பு
  • ரொறன்ரோவில் வழமைக்கு மாறான காலநிலை!
  • ஜெயம் ரவியின் புதிய திரைப்படங்கள் குறித்த அறிவிப்பு
  • அட்மிரல் வசந்தவின் கடவுச்சீட்டு முடக்கம் – விரைவில் கைது செய்ய நடவடிக்கை
  • வெனிசுவேலாவின் எல்லை நகரங்களில் மோதல்
  1. முகப்பு
  2. இந்தியா
  3. பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு 25 கோடி பேரம்: முதல்வர் குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு 25 கோடி பேரம்: முதல்வர் குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

In இந்தியா     November 6, 2018 1:12 pm GMT     0 Comments     1334     by : ஜெயச்சந்திரன் விதுஷன்

காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த. எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுப்பதற்காக பா.ஜ.க. 25 கோடி 30 கோடிரூபாய் வரை பேரம் பேசியதாக முதல்வர் குமாரசாமி குற்றச்சாட்டி உள்ளார்.

கர்நாடகத்தில் சிவமொக்கா, பெல்லாரி, மண்டியா ஆகிய 3 மக்களவைத் தொகுதிகள், ராமநகரம், ஜம்கண்டி ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சனிக்கிழமை அமைதியாக நடந்து முடிந்தது.

இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் குமாரசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்கள் தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை இடைத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துவதாகவும், கூட்டணி தொடர்பான பாஜகவின் குற்றச்சாட்டை மக்கள் நிராகரித்துள்ளதை எடுத்துக்காட்டுகிறது. இந்த வெற்றியால் அத்துமீறி செயல்படுபவர்களாக மாறமாட்டோம் என கூறினார்.

இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த. எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக 25 கோடி 30 கோடி வரை பேரம் பேசியதாகவும், ஆனால் யாரும் அவர்கள் பக்கம் செல்லவில்லை என முதல்வர் குமாரசாமி கூறினார்.

எங்களின் அடுத்த இலக்கு வரும் 2019 மக்களவைத் தேர்தலின்போது 28 தொகுதிகளில் வெற்றி பெறுவதே என்றும், அதன் முதல் படிதான் இந்த வெற்றி என கூறினார்.

கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டு ராவ் கூறுகையில், மக்கள் பாஜவை நிராகரித்துவிட்டதாகவும், நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை நிராகரித்துள்ளது. கர்நாடக இடைத்தேர்தல் முடிவு நாடு முழுவதற்கும் பாஜகவுக்கு எதிரான ஒரு செய்தியை கொண்டு செல்லும் என தெரிவித்தார்.

அமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறுகையில், மக்கள் ஆணையம் மிக முக்கியமானது, அது மக்களுக்கு வழிகாட்டுதலாகும் என்றும் தென்னிந்தியாவைப் பொறுத்தவரை, சமூக, பொருளாதார வளர்ச்சி, நிர்வாகத்திறன் ஆகியவற்றில் அவர்கள் பெறப்போகும் பயன் மற்றும் வெளிப்படைத்தன்மையை பார்த்தே மக்கள் வாக்களிக்கின்றனர். ராமர்கோவில் போன்ற விவகாரங்களை அரசியலாக்குவது எடுபடாது என அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தேர்தலில் சராசரியாக 65.57 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இடைத்தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் பெல்லாரி, சிவமொக்கா, மண்டியா, ஜம்கண்டி, ராமநகரத்தில் உள்ள கல்லூரிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்தக் கூட்டணியை எதிர்த்து முக்கியக் கட்சியாக பா.ஜ.க மட்டுமே களத்தில் இருந்தது.

பதிவாகியுள்ள வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில், 2 மக்களவைத் தொகுதிகளிலும், 2 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ், ம.ஜ.த. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. ஒரு மக்களவைத் தொகுதியில் மட்டும் பா.ஜ.க. வெற்றிபெற்றுள்ளது.

ஷிமோகா மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளரும், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகனுமான பி.ஒய்.ராகவேந்திரா, 47 ஆயிரத்து 388 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

ராம்நகர் சட்டப்பேரவைத் தொகுதியில், ம.ஜ.த. வேட்பாளரும், முதல்வர் குமாரசாமியின் மனைவியுமான அனிதா 1 லட்சத்து 9 ஆயிரத்து 137 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்த்க்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • வரவு- செலவு திட்ட அறிக்கைக்கு முன்னரே கூட்டணி அரசு கவிழும்: எடியூரப்பா  

    வரவு- செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்னரே, கர்நாடகாவில் கூட்டணி அரசு கவிழுமென சட்டசபையின்

  • மேகதாது விவகாரம்: கர்நாடக அரசுக்கு எதிராக  தமிழக அரசு மனு தாக்கல்  

    மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ள விடயங்கள் அனைத்தும் பொய்யெ

  • முழுமையில்லாத கடன் தள்ளுபடி வாக்குறுதிகளையே காங்கிரஸ் வழங்கியுள்ளது – மோடி குற்றச்சாட்டு  

    முழுமை பெறாத கடன் தள்ளுபடி வாக்குறுதிகளையே காங்கிரஸ் கட்சி மக்களுக்கு வழங்கியுள்ளதென பிரதமர் நரேந்தி

  • கோயில் பிரசாதத்தில் விஷம் கலந்த விவகாரம்: புதிய காரணம் வெளியானது!  

    கோயில் நிர்வாகத்தை கைப்பற்றுவதற்காகவே பிரசாதத்தில் விஷம் கலந்ததாக கோயிலின் இளைய மடாதிபதி இம்மாடி மகா

  • கால்வாயில் பேருந்து கவிழ்ந்து 30 பேர் உயிரிழப்பு – முதல்வர், பிரதமர் இரங்கல்!  

    கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டத்தில் பேருந்து ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பே


#Tags

  • Karnataka
  • kumaraswamy
    பிந்திய செய்திகள்
  • ரொறன்ரோவில் வழமைக்கு மாறான காலநிலை!
    ரொறன்ரோவில் வழமைக்கு மாறான காலநிலை!
  • ஜெயம் ரவியின் புதிய திரைப்படங்கள் குறித்த அறிவிப்பு
    ஜெயம் ரவியின் புதிய திரைப்படங்கள் குறித்த அறிவிப்பு
  • அட்மிரல் வசந்தவின் கடவுச்சீட்டு முடக்கம் – விரைவில் கைது செய்ய நடவடிக்கை
    அட்மிரல் வசந்தவின் கடவுச்சீட்டு முடக்கம் – விரைவில் கைது செய்ய நடவடிக்கை
  • LKG திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் விபரம் இதோ!
    LKG திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் விபரம் இதோ!
  • அல்ஜீரிய தலைநகரில் ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – 41 பேர் கைது!
    அல்ஜீரிய தலைநகரில் ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – 41 பேர் கைது!
  • இந்தியா-பாகிஸ்தான் இடையில் எழுந்துள்ள பதற்றத்தை தணிக்க உதவுமாறு ஐ.நா.வுக்கு கடிதம்
    இந்தியா-பாகிஸ்தான் இடையில் எழுந்துள்ள பதற்றத்தை தணிக்க உதவுமாறு ஐ.நா.வுக்கு கடிதம்
  • கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 114ஆக அதிகரிப்பு!
    கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 114ஆக அதிகரிப்பு!
  • பிரிஸ்டொல் நகரில் வெடிப்புச் சம்பவம்: மூவர் படுகாயம்
    பிரிஸ்டொல் நகரில் வெடிப்புச் சம்பவம்: மூவர் படுகாயம்
  • ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் இராணுவம் மீண்டும் தாக்குதல்
    ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் இராணுவம் மீண்டும் தாக்குதல்
  • பரிஸில் யெலோ வெஸ்ட் போராட்டம் அமைதியாக முன்னெடுப்பு
    பரிஸில் யெலோ வெஸ்ட் போராட்டம் அமைதியாக முன்னெடுப்பு
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.