பா.ஜ.க எம்.பி மீது காலணி வீச்சு

பத்திரிகையாளர் சந்திப்பில் பா.ஜ.க எம்.பி நரசிம்ம ராவ் மீது காலணி வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜி.வி.எல் நரசிம்மராவ். பா.ஜ.க தேசிய செய்தி தொடர்பாளரான இவர், ராஜ்யசபா எம்.பியாக உள்ளார்.
இவர் டெல்லியில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.
இதன்போது பத்திரிகையாளர்களுடன் அமர்ந்திருந்த ஒருவர் திடீரென்று நரசிம்ம ராவ் மீது காலணியை வீசினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கிருந்தவர்கள், அவரைப் பிடித்து தனியே அழைத்துச் சென்றனர். ஏன் இப்படி செய்தார், அவர் யார் என்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
#WATCH Delhi: Shoe hurled at BJP MP GVL Narasimha Rao during a press conference at BJP HQs .More details awaited pic.twitter.com/7WKBWbGL3r
— ANI (@ANI) April 18, 2019
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.