பா.ஜ.க.வைத் தோற்கடிப்பதற்காக ஒன்றிணைகிறோம் – ராகுல்
In ஆந்திரா November 1, 2018 1:13 pm GMT 0 Comments 1588 by : ஜெயச்சந்திரன் விதுஷன்

பா.ஜ.க.வைத் தோற்கடிப்பதற்காக சந்திரபாபு நாயுடுவுடன் ஒன்றிணைவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் ஈடுபாடு காட்டி வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்தார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உடனான சந்திப்புக்குப் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“இந்தச் சந்திப்பு சிறப்பான ஒன்றாக அமைந்தது. ஜனநாயகத்தைக் காக்கவும், இந்தியாவின் பெருமைமிகு நிறுவனங்களின் மாண்புகளைக் காக்கவும் இந்தியாவின் வளமான எதிர்காலத்திற்காக ஒருங்கிணைந்து செயல்படுவது என்று முடிவெடுத்துள்ளோம்.
எங்களது பேச்சில் நாங்கள் நிகழ் காலத்தையும், எதிர்காலத்தையும் மட்டும் குறித்துப் பேசினோம். பா.ஜ.க.வைத் தோற்கடிப்பதையும், ஜனநாயகத்தை பாதுகாப்பதையும் எங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
பத்திரிகையாளர்களான உங்களுக்கு வேண்டுமானால் பரபரப்பு செய்திகள் தேவைப்படலாம். ஆனால் எங்கள்முன் உள்ள சவால்களைச் சந்தித்து வெற்றி காண்பதையே நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.” என ராகுல் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.