‘பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீடு அறிவிப்பு
In சினிமா July 11, 2019 5:42 am GMT 0 Comments 1557 by : adminsrilanka

நடிகர் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகிவரும் ‘பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் சிங்கள் ட்ராக் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இதன் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் ஒகஸ்ட் 15ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் நடைபெறும் இறுதிக்கட்ட படப்பிடிப்போடு படத்தின் அனைத்துக்கட்ட படப்பிடிப்புக்ளும் முடிக்கப்பட்டு இறுதிக்கட்ட பணிகள் மிக வேகத்தில் ஆரம்பமாகும் என கூறப்பட்டுள்ளது.
கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவரும் இத்திரைப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துவருகின்னறார்.
ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் தீபாளவளிக்கு வெளியாகவுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளளார்.
இதில் நடிகை நயன்தாரா, ஜாக்கி, கதிர், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, இந்துஜா என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.