பிண நாற்றம் வீசும் மலரைக் காண குவியும் சுற்றுலாப்பயணிகள்!

சுவிட்சர்லாந்தில் பிண நாற்றம் வீசும் மலரைக் காண சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர்.
உலகிலேயே பெரிய மலரான Titan arum என்னும் மலர் சூரிச் பலகலைக்கழகத்தின் தாவரவியல் பூங்காவில் மலர்ந்துள்ளதையடுத்து அதைக் காண்பதற்காக மக்கள் கூட்டம் குவிந்துள்ளது.
Amorphophallus titanum என்னும் தாவரவியல் பெயர் கொண்ட இந்த மலரின் சிறப்பு, இது உலகிலேயே பெரியது என்பது மட்டுமல்ல, அது பிண நாற்றம் வீசக்கூடியது என்பதாகும்.
அழுகிய மாமிசத்தின் நாற்றம் கொண்ட மூன்றடி உயரம் வரை வளரும் இந்த மலர் மகரந்தச் சேர்க்கைக்காக வண்டுகளை கவர்ந்திழுக்கக்கூடியது.
இந்த மலர் மெதுவாக அதன் நாற்றத்தை இழக்கத் தொடங்கியுள்ளது. ஆனால் இந்த வார இறுதி வரை மக்கள் அதை பார்வையிட முடியும் என கூறப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.