பிரஜையொருவரின் இறுதிச்சடங்குகளைச் செய்வதற்கு பிறிதொரு நாட்டிடம் உதவி கோருவது இழிவானதாகும் – மங்கள
In இலங்கை December 15, 2020 10:59 am GMT 0 Comments 1491 by : Dhackshala

நாட்டின் பிரஜையொருவரின் இறுதிச்சடங்குகளைச் செய்வதற்கு உதவுங்கள் என்று பிறிதொரு நாட்டிடம் கோருவது மிகவும் இழிவானதாகும் என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களுக்கான இறுதிக் கிரியைகளை இலங்கை ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைவாக மாலைதீவில் நடத்துவது குறித்து ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி ஆராய்ந்து வருவதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷஹீட் தனது ருவிட்டர் பக்கத்தில் பபதிவிட்டிருந்தார்.
அந்தப் பதிவை மேற்கோள்காட்டி, மங்கள சமரவீர தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த பதிவில் ‘மாலைதீவின் வெளிவிவகார அமைச்சர் கூறியிருப்பது உண்மையெனும் பட்சத்தில், எமது நாட்டின் பிரஜையொருவரின் இறுதிச்சடங்குகளைச் செய்வதற்கு உதவுங்கள் என்று பிறிதொரு நாட்டிடம் கோருவது மிகவும் இழிவானதாகும்.
நாட்டின் அனைத்து பிரஜைகளும் தமது நம்பிக்கைகளுக்கு அமைவான இறுதிச்சடங்குகளை நடத்துவதற்கான உரிமையைக் கொண்டுள்ளனர்’ என குறிப்பிட்டிருக்கிறார்.
If this is true, it is a disgrace Sri Lanka has to request a neighboring country to ‘facilitate funeral rites’ of some of its own citizens. All Sri Lankan’s must have the right to carry out the last rites according to their respective beliefs on the soil they were born and bred. pic.twitter.com/U2LQJ6G9gy
— Mangala Samaraweera (@MangalaLK) December 14, 2020
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.