பிரதமருக்கும் ஈதல் வெடுனவெவ ஞானரதன தேரருக்கும் இடையில் சந்திப்பு
In Uncategorized December 22, 2020 6:20 am GMT 0 Comments 1169 by : Yuganthini

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் மிரிசவெட்டிய விகாராதிகாரி ஈதல் வெடுனவெவ ஞானரதன தேரருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நேற்று (திங்கட்கிழமை) மிரிசவெட்டிய விகாராதிகாரி வணக்கத்திற்குரிய ஈதல் வெடுனவெவ ஞானரதன தேரரை சந்தித்து அவரிடம் நலன் விசாரித்தார்.
எதிர்வரும் ஆண்டில் அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படவுள்ள சாசன மற்றும் சமூக நடடிக்கைகள் மற்றும் கொவிட்-19 தொற்றுக்கு மத்தியில் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள திட்டங்கள் தொடர்பில் பிரதமர் இதன்போது மிரிசவெட்டிய விகாராதிகாரி ஞானரதன தேரர் அவர்களுக்கு தெளிவுப்படுத்தினார்.
இறையியல் நடைமுறைகள் குறித்து அனுசாசனம் செய்த விகாராதிகாரி ஞானரதன தேரர், பிரதமருக்கு தனது ஆசிகளையும் வழங்கினார்.
குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன, இராஜாங்க அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க, ஷெஹான் சேமசிங்க, சன்ன ஜயசுமன, நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.எஸ்.குமாரசிறி, வட.மத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத், வட.மத்திய மாகாண முன்னாள் முதல்வர் எஸ்.எம்.ரஞ்சித், அநுராதபுரம் மாநகர மேயர் எச்.பீ.சோமதாச, புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.