பிரெக்ஸிற் : பிரதமர் ஜோன்சன் புதிய சவாலை எதிர்கொள்கிறார்
In இங்கிலாந்து October 4, 2019 11:12 am GMT 0 Comments 3349 by : S.K.Guna

பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தான் சமர்ப்பித்த பிரெக்ஸிற் திட்டங்களில் நெகிழ்வுத்தன்மையைக் காட்டி பிரஸ்ஸல்ஸை சமாதானப்படுத்தும் முயற்சிகளைத் தொடருவார் என்றும் கூறப்படுகின்றது.
பிரெக்ஸிற் தொடர்பாக முறையான பேச்சுவார்த்தைளைத் தொடரமுடியுமா என்பதைத் தீர்மானிக்க அவரது தலைமை பேச்சுவார்த்தையாளர் டேவிட் ஃபுரோஸ்ருடன் (David Frost) கலந்துரையாடியுள்ளார்.
பிரிட்டன், பிரெக்ஸிற் திட்டங்களில் மாற்றங்களைச் செய்யவதற்கான காலக்கெடு ஒக்ரோபர் 11 ஆம் திகதி என ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் நிர்ணயித்துள்ளதாகக் கூறப்படுகிறது,
அவ்வாறு மாற்றங்களைச் செய்யாதுவிடின் ஒக்ரோபர் 17 ஆம் திகதி நடைபெறும் ஐரோப்பியக் கவுன்சில் உச்சிமாநாட்டிற்கு முன்னர் முறையான பேச்சுவார்த்தைகள் இருக்காது என்றும் கூறியுள்ளனர்.
இதனிடையில்; எஸ்.என்.பி பாராளுமன்ற உறுப்பினர் ஜோனா செர்ரி மற்றும் ஜோலியன் மோம் ஆகியோர் பிரதமர் பொரிஸ் ஜோன்சனை, பென் சட்டத்திற்குட்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவதுடன் நீதிமன்ற நடவடிக்கை மூலம் பிரெக்ஸிற் காலநீடிப்பையும் கோருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.