பிரதமர் மே மீதான நம்பிக்கையை இழந்துள்ளதாக தொழிற்கட்சி தெரிவிப்பு
In இங்கிலாந்து May 6, 2019 6:20 am GMT 0 Comments 2491 by : Risha

பிரதமர் தெரேசா மே மீது நம்பிக்கை இழந்துள்ளதாக தொழிற்கட்சியின் நிதித்துறை செய்தித்தொடர்பாளர் ஜோன் மெக்டோனல் தெரிவித்துள்ளார்.
தொழிற்கட்சியுடனான பேச்சுவார்த்தை தொடர்பான தகவல்கள் ஊடகங்களுக்கு கசிந்துள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வேறுபாடுகளை கலைந்து ஒரு பிரெக்ஸிற் உடன்பாட்டிற்கு ஒப்புதல் வழங்குமாறு பிரதமர் தெரேசா மே தொழிற்கட்சி தலைவர் ஜெரமி கோர்பினுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால், பிரதமர் தற்போது பேச்சுவார்த்தையின் இரகசியத்தன்மையை சீர்க்குலைத்து பேச்சுவார்த்தைக்கான சாத்தியத்தை பாதித்துள்ளார் என ஜோன் மெக்டோனல் விமர்சித்துள்ளார்.
பிரித்தானியா கடந்த மார்ச் 29ஆம் திகதியுடன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக தீர்மானித்திருந்தது. ஆனால், பிரெக்ஸிற் உடன்பாடு எதுவும் எட்டப்படாத நிலையில் பிரெக்ஸிற் ஒக்டோபர் 31ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.